

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த். கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. தனது 69வது பிறந்தநாளை ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனதுபிறந்தநாளை யொட்டி பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள்,
இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டுத் திட்டங்களை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும்
வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், ''இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், ஸ்டாலினுடன் உடன் அமர்ந்திருக்கும் படத்தையும்இணைத்து, ''மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க'' என்று
தெரிவித்துள்ளார்.