Published : 01 Mar 2022 09:02 AM
Last Updated : 01 Mar 2022 09:02 AM

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

ராமேசுவரம்

எல்லை தாண்டியதாக கைதாகிஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து பிப்.12-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இரண்டு விசைப்படகுகளுடன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கரோனா பரிசோதனைக்குப் பிறகு ராமேசுவரம் மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2-வது முறையாக நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் மீனவர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லெனின்குமார், தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடித்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்தார். மீனவர்களின் 2 படகுகளை அரசுடமையாக்க நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x