

காவல்துறை வெடிகுண்டு நிபுணர் களின் பணி நிரந்தரம் தொடர் பான கோப்பு, முதல்வரின் ஒப்பு தலுக்காக காத்திருக்கிறது.
தமிழகத்தில், கடந்த 2011-ம் ஆண்டு பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரையின் போது, மதுரை அடுத்த திருமங்கலத்தில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. அப்போது, அதை செய லிழக்கச் செய்த வெடிகுண்டு பிரிவினரை அத்வானியே பாராட்டி னார். இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாராட்டுகளைப் பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது பணி நிரந்தரமின்றியும், சலுகைகளை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது 181 வெடிகுண்டு நிபுணர் பணியிடங்கள் உள்ளன. ராணுவத்தில் வெடி குண்டை கையாளும் பிரிவில் பணியாற்றியவர்கள், முறைப்படி தமிழக காவல்துறை வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சேர்க்கப்படுகின் றனர். இதில், 1991 முதல் 2008 வரை சேர்க்கப்பட்டவர்கள், பணி விதிப்படி 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டுக்குப் பின் சேர்க்கப் பட்டவர்கள், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பணி நீட்டிப்பு பெற்று வந்த இவர்கள், தொடர்ந்து பலமுறை, முதல்வர் தனிப்பிரிவிலும், உள்துறை செயலர், தலைமைச் செயலர் என பலரிடம் முறையிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக் கும் 70க்கும் மேற்பட்டவர்களில், 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 16 பேருக்கு மட்டும் பணி நிரந் தரம் செய்வதற்கான கோப்பு தயா ராகியுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத் திடம், பணி நிரந்தரம் செய்வதற் கான அனுமதி கோரப்பட்டது. ஆணையமோ, இது ஏற்கெனவே உள்ள உத்தரவுப்படி நடப்பதால் பணி நிரந்தரம் செய்யலாம் என கூறியது. இதற்கான உத்தரவுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெடி குண்டு நிபுணர் ஒருவர் கூறுகை யில், ``தற்போது கோப்பு முதல்வரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இப்போது உத்தரவிட்டாலும், தேர்தல் முடிந்த பின்னர்தான், சலுகைகளை பெற முடியும் என்பதால் முதல்வர் கருணைக்கு காத்திருக்கிறோம்’’ என்றார்.