தொடர் போராட்டம், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்

தொடர் போராட்டம், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்
Updated on
1 min read

கேரள பழங்குடி மக்களின் தொடர் போராட்டம் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பினரின் அச்சுறுத்தல் காரணமாக ஆனைகட்டியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது.

தமிழக - கேரள எல்லையில் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியான ஆனைகட்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. இந்த கடையால் இரு மாநில மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் எனவும் கேரளப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த பிப்.17-ம் தேதி தொடங்கி உண்ணாவிரதம், சாலைமறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என பலகட்டங்களாக போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிபிஐ மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஆனைக்கட்டி பகுதி யில் பிரசுரங்களை ஒட்டியுள்ளனர். அதில், மதுக்கடையை மூட வலி யுறுத்தியும், போலீஸாருக்கு எதி ரான வாசகங்களும் இடம்பெற்றி ருந்தன. மாவோயிஸ்ட் இயக்கத்தி னரின் இந்த பிரசுரங்களால் இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை போலீஸார், கோவை மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித் திருந்தனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு பிரச்சினைக்குரிய மதுக்கடை மூடப்பட்டது. மதுக்கடைக்கு எதிராக தொடர்ந்து 2 மாதங்களாக போராட் டம் நடத்திவந்த பழங்குடி மக்கள் இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேலும் நிரந்தரமாக மதுக் கடையை அகற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மதுக்கடை மூடப்பட்ட தகவல் கிடைத்தவுடன் தமிழகப் பகுதியில் வசிக்கும் மக்கள், கேரளத்தில் லாட்டரி வியாபாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக எல்லையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் கள் கூறும்போது, ‘‘கேரள மக்க ளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதுபோல, தமிழக மக்களின் கோரிக்கையான லாட்டரி வியாபாரத்தை கேரள அரசு கைவிட வேண்டும். தமிழக மக்களிடம் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் இந்த லாட்டரி கும்பல்கள் கொள்ளையடித்து வருகின்றன. எனவே எல்லையில் லாட்டரி விற்பனையைத் தடை செய்ய வேண்டும்” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண் கள் உட்பட 87 பேரை துடியலூர் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in