Published : 01 Mar 2022 10:13 AM
Last Updated : 01 Mar 2022 10:13 AM

பணியில் சேர 8-ம் வகுப்பு மட்டும் அடிப்படை கல்வித்தகுதி: கிராம உதவியாளராக கால்கடுக்க காத்திருந்த பொறியியல் பட்டதாரிகள்

8-ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித்தகுதி கொண்ட கிராம உதவியாளர் பணிக்கு பொறியியல், முதுகலைப் பட்டதாரிகள் வட் டாட்சியர் அலுவலகங்களில் வரிசைக்கு நிற்கும் நிலை உருவாகி யுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ஏமம், அலங்கிரி, ஆண்டிக்குழி, ஒடப்பன்குப்பம், பு.கிள்ளனூர், உ.செல்லூர், சிக்காடு, நத்தாமூர், பாலி மற்றும் மூலசமுத்திரம் ஆகிய 10 கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலருக்கான உதவியாளர்பணியிடங்கள் காலியாக இருப்பதால், அதற்குரிய காலிப்பணியிடங் களை நிரப்புதல் தொடர்பாக கடந்த ஜனவரி 21-ம் தேதி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அறி விப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி 10 கிராம உதவியா ளர் பணியிடங்களுக்கு 750 பேர்விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களிடம் நேற்று சான்று சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலா னோர் பொறியியல் பட்டம், முது கலை பட்டம் பெற்றிருந்ததை காண முடிந்தது.

ஏமம் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்த பொறியியல் பட்டதாரியான நந்தகுமாரிடம், பொறியியல் படித்து விட்டு இந்த பணிக்கு ஏன் விண் ணப்பித்தீர்கள் எனக் கேட்டபோது, “எந்த வேலையாக இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும்” என்று முதலில் கூறியவர், “‘பொறி யியல் படிப்புக்கு ரூ.10 ஆயிரம் தான் சம்பளம், ஆனால் இதில் முதல்நிலை சம்பளம் ரூ.12 ஆயிரம், அதுமட்டுமின்றி இது அரசு வேலை என்பதால் பணி நிரந்தரமும் கூட என்பதால் இதை தேர்வு செய்தேன்” என்றார். அவருடன் அவரது மனைவி ரோஜாவும் கைக்குழந்தையுடன் வந்திருந்தார். அவர் கணிதப் பிரிவில் இளங் கலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரும் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். “சொந்த ஊர் என்பதால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார் நம்பிக்கையுடன்.

இதேபோன்று பல இளைஞர் களை இங்கு காண முடிந்தது. அவர்களில் பேசிய பலரும், “நகரங்களில் வேலைபார்த்து வந்த நிலையில்,அந்த நிறுவனங்கள் மூடப்பட்டதால், வேலையின்றி நிற்கதியாய் நிற்கிறோம். தற்போது எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், இந்த வேலை கிடைத்தாலும் சந்தோ ஷமாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறோம்” என்று தெரிவித்தனர். கரோனா தாக்கம் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கும் நிலையில், இந்த கிராம உதவியாளர் பணிக்கு வந்திருக்கும் இளைஞர்களிடமும் அதன் தாக்கத்தை உணர முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x