Published : 20 Apr 2016 08:40 AM
Last Updated : 20 Apr 2016 08:40 AM

வேட்புமனு தாக்கல் 22-ம் தேதி தொடங்குகிறது: வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ததும் வேட்பாளர் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவை நேர்மையாகவும் அமைதியாகவும் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையிலான தேர்தல் துறையினர் செய்துவரு கின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி களாக உள்ள ஆட்சியர்கள், மாவட் டத்துக்குட்பட்ட தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவற்றை செய்துவரு கின்றனர்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை செய்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த தேர்தல்களில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அலு வலகங்கள் தொகுதியைவிட்டு வெளியில், ஆட்சியர் அலுவலகங் களில் இருந்தன. இதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தேர்தல் ஆணை யத்தின் கவனத்துக்கு அரசியல் கட்சிகள் கொண்டு சென்றன. இதையடுத்து, இந்தத் தேர்தலில் தொகுதிக்குள்ளேயே தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவல கங்களை அமைக்க தமிழக தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

மனு தாக்கலின்போது, வேட் பாளர்கள் பொதுத்தொகுதியாக இருந்தால் ரூ.10 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் கட்ட ணம் செலுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய 3 வாகனங் களில் மட்டுமே வேட்பாளர்கள் வரவேண் டும். மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியில் செல்லும்போது, வேட் பாளர்கள் விருப்பப்பட்டால் ‘நான் ஓட்டுக்கு பணம் தரமாட்டேன்’ என உறுதிமொழி எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் தேர்தல்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘இம்முறை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த அடுத்த அரை மணி நேரத்தில், அவரது முதல்கட்ட விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து அடுத்த 8 மணி நேரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இதை பொதுமக்களும் பார்த்துக் கொள்ளலாம்’’ என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக, திமுக, தேமு திக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளி யிட்டுவிட்டன. அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா உட்பட 234 வேட்பாளர்களும், ஒரே நோளில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x