

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெய லலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பிரச் சாரத்தை தொடங்கினார். முன்னறி விப்பு ஏதுமின்றி ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் அதி முக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்கி திமுக வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். வீடு வீடாகச் சென்ற அவர், ‘முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்’, ‘சொன்னாங்களே, செஞ் சாங்களா?’, ‘ஐந்தாண்டுகளாக துருப் பிடித்து கிடக்கும் தமிழ்நாடு’ என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங் களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தேர்தல் முடியும் வரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணி களைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச் சாரத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதனை நேற்று நான் ஆர்.கே.நகரில் தொடங்கி வைத்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடு படுவேன்.
நமக்கு நாமே பயணத்தின்போது 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து உரையாடினேன். அதுபோன்ற பிரச்சாரம்தான் இது. மக்களை நேரடியாக சந்திப்பது எனக்கும், திமுகவினருக்கும் புதி தல்ல. அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்க ளிடம் இருப்பதை ஆர்.கே.நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் நான் சென்ற இடங்களில் எல்லாம் காண முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலினுடன் இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் சென்றனர்.