

சுய உதவிக் குழுவினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில், தேனி மாவட்ட அதிமுக, திமுக வினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் என குறைந்த பட்சம் 10 பேரும், அதிக பட்சமாக 15 பேர் வரை உள்ளனர். இவர்கள் மாவட்டம், முழுவதும் சுமார் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இம்முறை தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகு திகளிலும் அதிமுக, திமுக, பாஜக, எஸ்.டி.பி.ஐ மற்றும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், த.மா.கா என 4 அல்லது 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்குகள் பிரிந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கூடுதலாக வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தற்போது மகளிர் சுயஉதவிக் குழுக்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற் சியில் அதிமுகவினர் ஈடுபட்டு ஒவ்வொரு குழுத் தலைவிகளையும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். மேலும் அதிமுக வெற்றிபெற்ற பின்னர், வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கூடுதலாக வங்கிக் கடன்கள் பெற்று தருவதோடு, அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினரும் ஆண்கள் சுய உதவிக் குழுவினரை குறிவைத்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
திமுக வேட்பாளர் வெற்றி பெற் றவுடன் அவர்களுக்கு தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற்று தருவதோடு, சிறிய அளவில் டெ ண்டர்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சுயஉதவிக் குழுவினர் சிலர் கூறி யதாவது: மகளிர், ஆண்கள் சுய உதவிக்குழுவினரை இழுக்கும் முயற்சியில் அதிமுக, திமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சி வேட்பாளர்கள் எங்களிடம் என்னென்ன வாக்குறுதி கொடுத்தால் வாக்குகளை பெறலாம் என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.