தூத்துக்குடியில் உலக சாதனைக்காக சிலம்பம் விளையாடிய 1,100 மாணவர்கள்

உலக சாதனைக்காக தூத்துக்குடியில்  நடைபெற்ற தொடர் சிலம்பம் விளையாட்டில் பங்கேற்று, ஆர்வமுடன் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்.
உலக சாதனைக்காக தூத்துக்குடியில் நடைபெற்ற தொடர் சிலம்பம் விளையாட்டில் பங்கேற்று, ஆர்வமுடன் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

உலக சாதனைக்காக தூத்துக்குடியில் 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்ற தொடர் சிலம்பம் விளையாட்டு நேற்று நடைபெற்றது.

உலக சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் உலக விளையாட்டு அகாடமி சார்பில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய 7 நாடுகளில் ஒரேநேரத்தில் பல ஆயிரம் பேர் சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் சிலம்ப ஆசான்களுக்கு ‘வீரக்கலை சிலம்பம்’ விருதும், சிலம்பக்கலை வளர்ச்சிக்காக உதவும் நிறுவனம் மற்றும் தனி நபர்களுக்கு ‘சிலம்பம் சப்போர்ட்டிங்’ விருதும் வழங்கப்பட்டது. மெகா சிலம்பம் உலக சாதனையும் பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவில், தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 1,000 மாணவ, மாணவிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர் சிலம்பம் விளையாட்டில் பங்கேற்றனர்.

தனிநபர் சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், 100 மாணவ, மாணவிகள் பங்கேற்று அதிகாலை 3.30 மணி முதல் தொடர்ச்சியாக 7 மணி நேரம் பாட்டில் மீது நின்றும், தலையில் தண்ணீர் டம்ளர் வைத்தபடியும் சிலம்பு, சுருள்வாள் சுற்றி சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in