Published : 28 Feb 2022 04:05 AM
Last Updated : 28 Feb 2022 04:05 AM

கோவை: ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: கோவை குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் ‘கற்கை நன்றே’ என்ற கல்வி உதவித் திட்டம் மூலம் ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021- 22-ம் கல்வியாண்டில் இந்தத் திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர மற்றும் விடுதிக்கான உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது. அந்த மாணவர்களின் இரண்டாம் செமஸ்டருக்கான நிதி வழங்கும் விழா குரும்பபாளையத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கோவை மேக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சரவணன் மாணிக்கம், விழுப்புரம் சரஸ்வதி பார்மா இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முத்து சரவணன், ஆரணி சன்டெக் எனர் கிரீன் உரிமையாளர் திருநாவுக்கரசு, சென்னை பேஸில் வித் எ ட்விஸ்ட் உணவகம் பாகீரதி ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளை நிறுவனரும், பொறியாளருமான தில்லை செந்தில்பிரபு தியானப் பயிற்சி வழங்கினார்.

மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோல, 2022-ம் ஆண்டு கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் info@anandachaitanya.org என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் விவரங்களை அனுப்பலாம் அல்லது www.anandachaitanya.org என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x