

கடன் பெற்று திரும்பச் செலுத்தா தவர்கள் வங்கித்தேர்வுக்கு விண் ணப்பிக்கத் தகுதி இல்லாதவர் களாக வங்கித்துறை அறிவித்த தால், கல்விக்கடன் பெற்ற மாண வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வில் காலிப்பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. இதையடுத்து, வரும் 25-ம் தேதி வரை பணியிடங் களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்த வங்கி அறிவிப்பு வெளியிட்டுள் ளது. அந்த விண்ணப்பத்தில் பணியின் தன்மை அதற்கான தகுதி என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் சிபில் பட்டியலில் உள்ளவர்கள் தேர்வுக்கு தகுதியில்லாதவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தீபக்சந்திரகாந்த் கூறியதாவது:
பட்டம் பெற்று வேலை கிடைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைத்து விடலாம் என்கிற நம்பிக்கையுடனே மாணவர்கள் வங்கியில் கல்விக் கடனை பெறுகின்றனர். ஆனால், கடன் பெற்று செலுத்தாதவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்ற அறிவிப்பு எதைக் குறிக் கிறது.கல்விக்கடனை இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டு அதனை கட்டாமல் விண்ணப்பிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் கூறுவதுபோல் இருக்கிறது.
இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (ஃபெபி) கோவை மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் கூறும்போது, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த அறிவிப்பு சரியானது அல்ல. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் முறையாக செலுத்தவில்லை என்றால் ஒரு வருடத்திலேயே சிபில் பட்டியலில் வந்துவிடும்.
பின்னர், வங்கிப் பணியிடத் துக்கு தகுதி இல்லை என்று சொல் வது ஏற்கமுடியாது. படித்து முடித் தவர்கள் வேலை கிடைத்தால்தான் வாங்கிய கடனை அடைக்க முடியும். அதற்கான வாய்ப்பையே மறுத்துவிட்டால் எந்த வகையில் மாணவர்கள் அடைப்பார்கள்.
கருப்புப் பட்டியலில் இருந்தால் வங்கிப்பணியிடத்துக்கு தகுதியில் லாதவர்கள் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்கமுடி யாது. இதனை வங்கி ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்ப தோடு உடனடியாக இதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாபஸ் பெற வேண்டும்’ என்றார்.