Published : 24 Apr 2016 09:15 AM
Last Updated : 24 Apr 2016 09:15 AM

விதிமீறல் புகார்களின்பேரில் ஒரே நாளில் 4 ஆட்சியர், 5 எஸ்.பி.க்கள் உட்பட உயர் அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் விதிமீறல் தொடர்பாக அரசியல் கட்சியினர் கொடுத்த புகார்களின்பேரில் 4 மாவட்ட ஆட்சி யர்கள், 5 மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 18 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் ஒரே நாளில் இடமாற்றம் செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 4-ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் எந்த வகையிலும் விதிமீறல்கள் நடக்காதவாறு கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத் தியுள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆகியோர் மீது பல்வேறு அரசியல் கட்சியி னரும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர். தேர்தல் ஆணை யர்கள் சென்னை வந்தபோது, நேரிலும் புகார் கொடுத்தனர். இந்நிலையில், 4 மாவட்டங்களின் ஆட்சியர்கள், 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், விராலி மலை தேர்தல் நடத்தும் அதிகாரி உட்பட மொத்தம் 18 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன் விவரம்:

4 ஆட்சியர்கள்

வேலூர் ஆட்சியர் ஆர்.நந்த கோபால் மாற்றப்பட்டு, பூம்புகார் கப்பல் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திர ரத்னு நியமிக்கப் பட்டுள்ளார். சேலம் ஆட்சியர் வி.சம்பத் மாற்றப்பட்டு, தொல் லியல் துறை ஆணையர் டி.கார்த் திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியர் டி.என்.ஹரிகரன் மாற்றப்பட்டு, போக்கு வரத்து ஆணையர் சத்யபிரத சாகு நியமிக்கப்பட்டுள்ளார். தேனி ஆட்சியர் என்.வெங்கடாசலம் மாற்றப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

5 மாவட்ட எஸ்.பி.க்கள்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஜி.சுப்புலட்சுமி மாற்றப்பட்டு, சென்னை தென்மண்டல சிபிசிஐடி எஸ்.பி. அமித்குமார் சிங் நியமிக் கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை எஸ்.பி.யான எஸ்.ராஜேஸ்வரி மாற்றப்பட்டு, பாளையங்கோட்டை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சந்தோஷ் ஹடிமணி நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி எஸ்.பி.யான ஜெ.லோகநாதன் மாற்றப்பட்டு, மதுரை மாநகர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பந்தி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி.யான எஸ்.மகேஸ்வரன் மாற்றப்பட்டு, சேலம் மாநகர் குற்றம் மற்றும் போக்கு வரத்து காவல் துணை ஆணையர் வி.சசிமோகன் நியமிக்கப்பட்டுள் ளார். திருச்சி எஸ்.பி.யான இ.எஸ்.உமா மாற்றப்பட்டு, கோவை மாநகர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி யாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

4 ஆட்சியர்கள், 5 எஸ்.பி.க்கள் தவிர 5 துணை காவல் கண்காணிப் பாளர்கள், ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ), ஒரு கோட்டாட்சியர் (ஆர்டிஓ), 2 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 18 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

5 டிஎஸ்பிக்கள்

ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) நந்தகுமார் மாற்றப்பட்டு, போதை ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஆர்.குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு டிஎஸ்பி சூரி யமூர்த்தி மாற்றப்பட்டு, கோவை சிசிஐடபிள்யூ டிஎஸ்பி டி.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக் கோட்டை டிஎஸ்பி தனபால் மாற்றப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பியான எஸ்.ஆரோக்கியம் நியமிக்கப்பட்டுள் ளார்.

வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம் மாற்றப்பட்டு, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜி.ஹெட்டர் தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி ராஜா மாற்றப்பட்டு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜி.கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதர அதிகாரிகள்

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டாட்சியரும், விராலிமலை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வடிவேல் பிரபு, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர், புழல் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 தேர்தல்களில் இப்போதுதான் அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 13 அதிகாரிகள், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 8 அதிகாரிகள் மாற்றப் பட்டனர். தற்போது ஒரே நாளில் 18 அதிகாரிகள் மாற்றப்பட்டுள் ளனர். இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.

கட்சிகள் மீது 2,764 வழக்கு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 9,735 புகார்கள் வந்துள் ளன. இதுதவிர வாட்ஸ் அப்பில் 800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன. அரசியல் கட்சிகள் மீது 2,764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x