Published : 21 Apr 2016 08:07 AM
Last Updated : 21 Apr 2016 08:07 AM

ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் 2 பேர் மரணம்: பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கம்

சேலத்தில் 107 டிகிரி சுட்டெரித்த வெயில்

சேலத்தில் நேற்று நடந்த ஜெயலலிதா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 2 பேர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கமடைந்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங் களைச் சேர்ந்த அதிமுக வேட்பா ளர்களை ஆதரித்து சேலம் மகுடஞ் சாவடி அடுத்த கூத்தாடிபாளை யத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்க நூற்றுக் கணக்கான லாரிகளில் அதிமுக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டி ருந்தனர். காலை 11 மணி முதலே பொதுக்கூட்ட திடலில் தொண் டர்கள் திரண்டனர்.

சேலத்தில் வெயில் நேற்று 107.3 டிகிரியாக இருந்தது. இதனால், பொதுக்கூட்ட திடலில் சிக்கிய தொண்டர்கள் பெரும் அவதிக் குள்ளாகினர். மேலும் குடிநீர் வசதி இல்லாததால் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்த சேலம் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர் வெயி லுக்கு சுருண்டு விழுந்து சம்பவ இடத் திலும், பச்சியண்ணன் என்பவர் சிறுநீர் கழிக்க சென்ற இடத்திலும் உயிரிழந்தனர். மேலும் அய்யண் ணன்(55), நீலாவதி(53), பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பொள்ளாச் சியைச் சேர்ந்த எஸ்ஐ கற்பகம் ஆகியோர் மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மேலும் லாரிகள் மூலமாக வந்த இளம்பிள்ளை அங்கையர்கண்ணி, சுப்பிரமணி, நாமக்கல் புளியங்காடு லட்சுமி, அன்பழகன் ஆகிய 4 பேர் ஆங்காங்கே சிறுசிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்தனர்.

பொதுக்கூட்டத்துக்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்ததால், சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x