

ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 44 பேரின் காவலை ஏப்ரல் 12 வரை மன்னார் நீதிமன்றம் நீட்டித் துள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத் தில் இருந்து பிப்ரவரி மாதம் 10-ம் தேதி கடலுக்குச் சென்ற கிளாஸ்டன், கஸ்தூரி சேதுராமன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதில் இருந்த 12 மீனவர்களையும், மார்ச் 6-ம் தேதி 9 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களையும், மார்ச் 14-ம் தேதி தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்த பாம்பன் நாட்டுப் படகு மீன வர்கள் 23 பேரையும் சிறை பிடித்து வவுனியா சிறையில் அடைத் துள்ளனர்.
இந்த 44 மீனவர்கள் காவல் திங்கட்கிழமையோடு முடிவடைந் தது.
இதைத் தொடர்ந்து மீண் டும் மன்னார் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்.12 வரை காவல் நீட்டிக்கப்பட்டு வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.