திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மேயர், 9 துணை மேயர் பதவி கேட்டுள்ளோம்: திருமாவளவன் எம்பி தகவல்

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மேயர், 9 துணை மேயர் பதவி கேட்டுள்ளோம்: திருமாவளவன் எம்பி தகவல்
Updated on
1 min read

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மேயர் பதவி, திருச்சி உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகளை கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 55 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 18 வார்டுகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பல இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். குறிப்பாக, கடலூர் மேயர் பதவி, திருச்சி உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகளைக் கேட்டுள்ளோம். அதை அவர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

பாஜகவுக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலைவிட 0.5 சதவீதம் அளவுக்கு வாக்குகள் சரிவு ஏற்பட்டுள்ளதே உண்மை நிலை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in