தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்: கோவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பேச்சு

தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்: கோவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பேச்சு
Updated on
1 min read

தேர்தல் தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடையே, அதிமுக கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பேசியதாவது: அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவில் இந்த முறை தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அடுத்தமுறை மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், திமுகவில் வாய்ப்புக்காக கடைசி இடத்தில் இருக்க வேண்டி வரும். அதிமுகவினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு பதிவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைப்போல எங்களையும் சிறையில் அடையுங்கள்.

பொய்வழக்குகளில், நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக நமக்கு வெற்றிவரும். திமுகவை எப்படியும் வீழ்த்துவோம். அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ம் தேதி (நாளை) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in