எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு மே 2 முதல் ஆன்லைன் விண்ணப்பம்

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு மே 2 முதல் ஆன்லைன் விண்ணப்பம்
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) செயலாளர் மல்லிகா நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற் கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்குகிறது. பதிவு செய்ய கடைசி நாள் மே 17-ம் தேதி. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.500. (எஸ்சி, எஸ்டி வகுப் பினருக்கு ரூ.250)

எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் 11-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்.பிளான், எம்ஆர்க் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் 12-ம் தேதியும் நடக்கிறது. கூடுதல் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu/tancet2016) வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in