

சமீபத்தில் நடந்த ‘ஜம்பிங் ஜாக்ஸ்' இணைய வழி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில், சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். ஆனால் 170 பேர் மட்டுமே இந்த சாதனையை செய்து முடித்தார்கள். இதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். இந்த பள்ளியில் ஏற்கெனவே 50 மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காட்வின் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் பிராக்ரன்ஸ் லதா, உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், சக்திகுமார், உடற்கல்வி இயக்குநர் ஞானசேகர், உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாராட் டினர்.