மதுரை மேயர் வேட்பாளர் பட்டியலில் 3 பெண் கவுன்சிலர்கள்: திமுக தலைமைக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு

மதுரை மேயர் வேட்பாளர் பட்டியலில் 3 பெண் கவுன்சிலர்கள்: திமுக தலைமைக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு
Updated on
1 min read

மதுரை மேயர் வேட்பாளர் தேர் வில் 3 பேரை சிபாரிசு செய்து அமைச்சர்கள், மாவட்டச் செயலா ளர்கள் திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் தேர்வில் மாவட்ட திமுக நிர்வாகிகளிடையே குழப்பம் நில வியது. அமைச்சர்கள், 3 மாவட்டச் செயலாளர்கள் ஆளுக்கொரு நபருக்கு ஆதரவு தெரிவித்ததால் மேயர் வேட்பாளரை அறிவிப்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக தலைமை மாவட்டச் செயலாளர்களிடம் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத்தலைவர் வேட்பாளர் களின் பட்டியலை நேற்றைக்குள் அனுப்ப அறிவுறுத்தியது. இதன்படி, மதுரையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

அமைச்சர் பி.மூர்த்தி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆகியோர் 5-வது வார்டு கவுன்சிலர் வாசுகியை மேயர் வேட்பாளருக்கு சிபாரிசு செய்துள்ளனர். அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் இணைந்து 57-வது வார்டு கவுன்சிலர் இந்திராணிக்கும், முன்னாள் அமைச்சரும், மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான பொன்.முத்துராமலிங்கம் தனது மருமகளும் 32-வது வார்டு கவுன்சிலருமான விஜயமவுசுமிக்கு சிபாரிசு செய்துள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் யாரை முடிவு செய்கிறாரோ அவர்தான் திமுக வேட்பாளர். துணை மேயர் பதவிக்கு 58-வது வார்டு கவுன்சிலர் எம்.ஜெயராமனை மாவட்ட செய லாளர் மணிமாறனும், 13-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரை அமைச்சர் பி.மூர்த்தியும், 68-வது வார்டு கவுன்சிலர் மூவேந்திரனை மாவட்ட செயலாளர் கோ.தள பதியும் சிபாரிசு செய்துள்ளனர். துணை மேயர் வேட்பாளராக பழனிவேல்தியாகராஜன் யாரையும் சிபாரிசு செய்யவில்லை. இந்த பட்டி யலில் இருந்து ஒருவரை அவரது பின்னணி குறித்து உளவுத் துறை மூலம் விசாரித்து அறிந்து மேயராக கட்சி தலைமை தேர்வு செய்யும் எனத் தெரிகிறது. நிர்வாகிகள் அளித்த பட்டியலை ஏற்காத மூத்த நிர்வாகிகள் சிலர், தங்கள் ஆதரவு வேட்பாளர் பட்டியலை தலைமை யிடம் அளிக்கின்றனர். மேயர் வேட்பாளரின் சமூகத்துக்கு ஏற்ப துணை மேயர் தேர்வு இருக்கும்.

திருமங்கலம் நகராட்சித் தலை வர் பதவியை நகர் செயலாளர் முருகன், மேலூர் நகராட்சித் தலைவர் பதவியை நகர் திமுக செயலாளர் முகம்மது யாசின், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை நகர் செயலாளர் தங்க மலைப்பாண்டி ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவ்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in