

தேனி சுப்பன் தெருவைச் சேர்ந் தவர் தங்கத்துரை(37). ஏலக்காய் மொத்த வியாபாரி. இவர் போடியைச் சேர்ந்த வியாபாரிகள் ராஜேஷ், நிவேதினி, ஜெயபால், ஜெயந்தி ஆகியோருக்கு ரூ.3 கோடிக்கு ஏலக்காய் விற் பனை செய்துள்ளார். இதற்காக அவ்வப்போது பணம் கொடுத் தனர். மீதம் ரூ.86 லட்சத்தை பல மாதங்களாக தரவில்லை.
மேலும், இவர்கள் போடியைச் சேர்ந்த கண்ணன், சிபி, கேரளாவைச் சேர்ந்த பிலால்நவாத், சஜூ ஆகியோரிடமும் 3.85 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர் என்று தங்கத்துரை மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜேஷை கைது செய்தனர்.