முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வஉசி துறைமுகம் ரூ.50 லட்சம்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், முதல்வரின் பொது நிவாரண  நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்  தலைவர் தா.கி. ராமச்சந்திரன் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் வழங்கினார்.
Updated on
1 min read

முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன் சந்தித்து, ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். தலைமைச் செயலாளர் இறையன்பு உடனிருந்தார்.

இதுகுறித்து தா.கி. ராமச்சந்திரன் கூறும்போது, “ கரோனாபெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட வேண்டிய அவசியத்தை கருதி,வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேவைகளை உணர்ந்தும் ரூ.40.5 லட்சம் செலவில் உபகரணங்களும், ரூ.17.5 லட்சம் செலவில் மருந்துகளும், ரூ.1.5 லட்சம் மதிப்பில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மேலும், பிரதமரின் நிவாரணநிதிக்காக ரூ.2 கோடியும், தமிழகமுதல்வரின் பொது நிவாரணநிதிக்காக ரூ.50 லட்சமும் துறைமுகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூ.14.79 லட்சத்தை வழங்கி உள்ளனர்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in