Published : 16 Apr 2016 08:23 AM
Last Updated : 16 Apr 2016 08:23 AM

கடலோரப் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கத்தால் தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும்: மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை

கடலோரப் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கத்தால் தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்று ஆட்சியர்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக கடலோர மாவட்டங் களில் சித்திரை மாதம் பிறப்பதற்கு முன்பே கடும் வெயில் கொளுத் தத் தொடங்கியது. சித்திரை மாதம் பிறந்துள்ள நிலையில் இயல் பைவிட வெப்பம் அதிகமாக இருப்ப தால் பகல் நேரங்களில் பொது மக்கள் அதிக அளவில் வெளியில் வருவதை தவிர்க்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பலர் கோடை வெப்பத் திலிருந்து தப்பிக்க, இளநீர், மோர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்தியும், தர்பூசணி போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை உண்டும் வருகின்றனர்.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக 37.4 டிகிரி செல்சியஸ், கடலூரில் 35 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினத்தில் 35.8 டிகிரி செல்சியஸ், கோவையில் 38.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.9 டிகிரி செல்சியஸ், வேலூரில் 39.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 40 டிகிரி செல்சியஸ், கரூரில் 40.5 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவானது.

இதற்கிடையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், கடும் வெயிலால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள, அவசிய தேவைகள் இன்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். அந்த நேரத்தில் அதிக அளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம். தண்ணீர் நன்கு பருக வேண்டும். காற்றோட்டமாக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளியே செல்ல நேரும்போது, குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். கழுத்து மற்றும் கை, கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்ல லாம். களைப்பாக உணரும் பட்சத் தில் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். மேலும் டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்து மோர், கஞ்சி மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம். கால்நடைகளை நிழலான இடங் களில் தங்க வைத்து, தேவையான தண்ணீரும் வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பத் தாக்குதல் அதிகமாக இருப்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

தமிழகத்தின் உள் மாவட்டத்தில் மேற்கில் இருந்து காற்று வீசுகிறது. காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும், வானில் மேகக் கூட்டங்கள் இல்லாததாலும் சூரிய னின் வெப்பம் நேரடியாக பூமியில் விழுகிறது. இதனால், தமிழகத் தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள் மாவட்டங் களிலும் சனிக்கிழமை வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக் கும். சென்னையில் வெப்பநிலை இயல்பைவிட ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிக மாக இருக்கும். தற்போது வெப்பச் சலனம் எதுவும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x