கோவை கோட்டத்தில் 55 அஞ்சல் நிலையங்களில் ஆதார் சிறப்பு மையம்

கோவை கோட்டத்தில் 55 அஞ்சல் நிலையங்களில் ஆதார் சிறப்பு மையம்
Updated on
1 min read

புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஆதார் அட்டையில்திருத்தங்கள் உள்ளிட்ட சேவைகளை பெற அஞ்சல் நிலையங்களில் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை கோட்ட அஞ்சல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனி மனிதனின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும், ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க தமிழக அரசின் பொது இ-சேவை மையங்கள், தனியார் சேவை மையங்களை பொதுமக்கள் நாடி வருகின்றனர். அங்கு பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், இதனை எளிமைப்படுத்தும் விதமாகவும், ஆதார் சேவைகளை பொதுமக்கள் விரைந்து பெறவும் அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேவைகளைப்பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் தொடங்கி அனைத்து சேவைகளையும் அஞ்சல் நிலையங்கள் மூலமாகப் பெறலாம்.

அஞ்சல் நிலையங்களில் புதிதாக விண்ணப்பிப்போருக்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றும், மாற்றங்கள் செய்ய விண்ணப்பிப்போர் ஒவ்வொரு திருத்தத்துக்கும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அஞ்சல் துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து கோவை கோட்ட அஞ்சல் அலுவலர் கோபாலன்‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: கோவை கோட்டத்துக்குட்பட்ட 55 அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம். குறிப்பாக, கோவை கூட்செட் சாலையில் உள்ளதலைமை அஞ்சலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சலகம், ஆர்.எஸ்.புரம் கிழக்கு அஞ்சலகம், அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் அருகேயுள்ள அஞ்சலகம், எஸ்.ஆர்.கே.வி. பள்ளி அஞ்சலகம் ஆகிய இடங்களில் இதற்காக சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூட்செட் சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதலே ஆதார் சேவை மையங்கள் செயல்படத் தொடங்கி விடுகின்றன. பிற அஞ்சலகங்களில் வழக்கமான நேரத்துக்கு சென்று பொதுமக்கள் ஆதார் சேவைகளைப் பெறலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in