

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கோ.சதீஷ் மாற்றப்பட்டு சிவ.வீ.மெய்யநாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை 4 முறை வேட்பாளர்களை திமுக மாற்றி யுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக் கப்பட்டிருந்த டாக்டர் கோ.சதீஷ் மாற்றப்பட்டு, அங்கு சிவ.வீ.மெய் யநாதன் போட்டியிடுவார்’ என கூறப்பட்டுள்ளது.
திமுகவில் 173 தொகு திகளுக்கான வேட்பாளர் பட்டி யல் கடந்த 13-ம் தேதி வெளி யிடப்பட்டது. மமகவுக்கு ஒதுக்கப் பட்ட உளுந்தூர்பேட்டை தொகு தியை அக்கட்சி திரும்ப ஒப் படைத் தது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக ஜி.ஆர்.வசந்த வேல் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக்கோரி திமுகவினர் மொட்டை அடித் தல், உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம், மறியல், கட்சி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் டி.பி.எம்.மைதீன்கானை மாற்றக்கோரி நூற்றுக்கணக்கான திமுகவினர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தை கடந்த 15-ம் தேதி முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே, கடந்த 16-ம் தேதி ஒரத்தநாடு தொகுதி வேட் பாளர் எஸ்.எஸ்.ராஜ்குமார் மாற்றப்பட்டு புதிய வேட்பாள ராக என்.ராமச்சந்திரன் அறி விக்கப்பட்டார். அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் எஸ்.பவானிக்கு எதிராக போராட் டங்கள் வலுத்ததால் அவர் மாற்றப்பட்டு என்.ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.
அதேபோல விருத்தாச்சலம் தொகுதி திமுக வேட்பாளர் தங்க ஆனந்தனுக்கு எதிராக போராட் டங்கள் வலுத்ததால் கடந்த 19-ம் தேதி அவரும் மாற்றப்பட்டார். அங்கு கோவிந்தசாமி (எ) பாவாடை கோவிந்தசாமி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மேலும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இந்நிலையில், 4-வது முறையாக திமுக வேட் பாளர் மாற்றப்பட்டுள்ளார். அதிமுகவை போல திமுகவிலும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வருவது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெய்யநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், ஆலங் குடி தொகுதியின் பல்வேறு இடங் களில் அவரது ஆதரவாளர்கள், திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும், முறை யிட்டபடி நீதி வென்றதாக கீரமங்கலம் சிவன் கோயிலில் உள்ள நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடும் நடத்தினர்.
ஆலங்குடி தொகுதி வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ள சிவ.வீ.மெய்யநாதன்(47), ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த வர். எம்சிஏ படித்துள்ளார்.