

தக்காளி விளைச்சல் அதிகரித்து தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வெளி மார்க் கெட்டில் கிலோ ரூ.5 முதல் 10 வரை விற்பனையாவதால் விவ சாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற் பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட் டன்சத்திரம், பழநி, அய்யலூர், வடமதுரை, தொப்பம்பட்டி, கள்ளி மந்தயம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடர்மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமடைந்ததால் வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது.
அதன்பின் தக்காளி செடிக்கு ஏற்ற சீதோஷ்ணநிலை நிலவியதால் செடிகளில் தக்காளி காய்த்து குலுங்கத் தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் தக்காளி வரத்து அதிகரித்து, அதன் விலை படிப் படியாக குறையத் தொடங் கியது.
தற்போது தேவைக்கும் அதி கமாக தக்காளி வரத்து அதி கரித்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி வெளி மார்க்கெட்டில் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது.
தக்காளியை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடி களிலேயே விட்டுவிட்டனர். இதையடுத்து சில வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்குச் சென்று விவசாயிகளிடம் தக்காளியை வாங்கி, சிறிய வாகனங்களில் தெருத்தெருவாகக் கொண்டு சென்று கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கமிஷன் கடை உரிமையாளர் ஆறுமுகம் கூறியதாவது:
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்ததை அடுத்து பல விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர். தற்போது அவை அறுவடைக்கு வந்ததால் தக் காளி வரத்து அதிகரித்துள்ளது. விவ சாயிகளிடமிருந்து கிலோ ரூ.3.50-க்கு வாங்கப்படும் தக்காளி வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.5 முதல் 10 வரை விற்பனையாகிறது.
இதே நிலை இன்னும் ஒரு மாதத்துக்கு தொடர வாய்ப்புள்ளது என்று கூறினார்.