Published : 26 Feb 2022 07:35 AM
Last Updated : 26 Feb 2022 07:35 AM
திருவண்ணாமலை: தி.மலை முத்து விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் முனுசாமி மகன் சூர்யா(25). வேலூர் மாவட்டம் கம்மவன் பேட்டை வண்ணாரப்பேட்டை தெருவில் வசிப்பவர் கோவிந்தசாமி மகன் பழனி(35). இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தி.மலை நகர காவல்துறையினர் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கலசப்பாக்கம் அடுதத வீரளூர் கிராமத்தில் வசிப்பவர் குமார் மகன் மணிகண்டன்(31). இவர் மீது, போளூர் காவல்துறையினர் வழிப்பறி வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பாரதியார் தெருவில் வசிக்கும் பன்னீர்செல்வம் மகன் அருண்குமார்(25) என்பவரை கொலை முயற்சி வழக்கில் தூசி காவல் துறையினர் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரது சமூக விரோத செயலை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 4 பேரையும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT