Published : 26 Feb 2022 07:43 AM
Last Updated : 26 Feb 2022 07:43 AM

வந்தவாசியில் விபத்து: ராஜஸ்தான் மாநில வணிகர்கள் இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் நிம்பாவாஸ் கிராமத்தில் வசித்தவர் மகிபால்சிங்(25), தேபாவாஸ் கிராமத்தில் வசித்தவர் சேட்டாராம்(33). இவர்கள் இருவரும், வந்தவாசி பொட்டிநாயுடு தெருவில் வசித்து வந்தனர்.

மேலும், வந்தவாசியில் செல்போன் கடை மற்றும் மொத்த விற்பனை என வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடைகளை மூடிவிட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். வந்தவாசி - திண்டிவனம் சாலையில் உள்ள சத்யா நகர் பகுதி அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரும்பு ஏற்றி வந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பொன்னூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x