

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஜாஹித்(37). இவர், பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவரை உமராபாத் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல, திருப்பத்தூர் மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் திருப்பத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் (31) என்ப வரை சாராய வழக்கில் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேர் மீதும் ஏற் கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்ய வேண் டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ் ணன் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அளித்த உத்தரவின் பேரில் பிரபாகரன் மற்றும் முகமது முஜாஹித் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்து அதற்கான உத்தரவு நகல் சிறைத்துறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.