டிரைவரை தாக்கி காரை கடத்திய கும்பல்: ஜிபிஎஸ் இருந்ததால் காரை கைப்பற்றிய போலீஸார்

டிரைவரை தாக்கி காரை கடத்திய கும்பல்: ஜிபிஎஸ் இருந்ததால் காரை கைப்பற்றிய போலீஸார்
Updated on
1 min read

சென்னை ஈஞ்சம்பாக்கம் கௌரி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் குமார் (32). இவர் தனக்கு சொந்தமான காரை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாலா டூரிஸ்ட் நிறுவனத்தில் இணைத்து ஓட்டி வருகிறார்.

நேற்று காலை 4 மணியளவில் காரை திரிசூலம் ரயில் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அங்கு வந்து குமாரிடம் காருக்கு செலுத்த வேண்டிய தவணை தொகை நிலுவையில் உள்ளதாக கூறி அவரை மிரட்டி கையால் தாக்கினர்.

பின்னர் குமாரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். கிண்டி அருகே குமாரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளனர்.

உடனே குமார் புனித தோமையர் மலை ஜோதி திரையரங்கம் அருகில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரிடம் தகவல் கூறியுள்ளார். மேலும் கார் கடத்தப்பட்ட தகவலை குமார் தனது நிறுவனத்துக்கும் தெரிவித்தார். கடத்தப்பட்ட காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதன் மூலம் கார் மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், அண்ணாசதுக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் செல்வகுமார், சாமி ஆகியோர் கடத்தப்பட்ட காரை மாநிலக் கல்லூரி அருகே மடக்கிப் பிடித்து, காரை கடத்தி வந்த சுரேஷ்ராஜன்(47) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் ராஜனுடன் வந்து தலைமறைவான 3 பேரை பிடிக்க தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in