Published : 25 Feb 2022 05:50 PM
Last Updated : 25 Feb 2022 05:50 PM

கரோனா காலத்தில் 2.80 லட்சம் வழக்குகளை முடிக்க காரணமான வழக்கறிஞர்களுக்கு பாராட்டு: நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா

சென்னை: கரோனா காலக்கட்டத்தில் 2 லட்சத்து 80 வழக்குகளை முடித்து, நாட்டிலேயே அதிக வழககுகளை முடித்த இரண்டாவது உயர் நீதிமன்றம் என்ற பெருமைக்கு காரணமாக இருந்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக பிரவு உபசார விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013-ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 1960-ம் ஆண்டு பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 1985-ல் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். அவரது தந்தை ஐஏஎஸ் அதிகாரி. கல்வி நிறுவன பணியாளர்ளுக்கு இஎஸ்இ பொருந்தும் என தீர்ப்பளித்த மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு தலைமை வகித்தவர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா.

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தார். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கியது, நடிகர் சங்க தேர்தல் செல்லும் என தீர்ப்பளித்தது என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அளித்த பல்வேறு தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x