Published : 25 Feb 2022 07:59 AM
Last Updated : 25 Feb 2022 07:59 AM

மறியல் வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

சென்னை: திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளது.

இதற்கிடையில், மறியலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஜார்ஜ் டவுன்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் ஜெயக்குமாரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் சந்தித்தனர். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x