

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி திட்டினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இவர்களை கைது செய்ய வேண் டும். நடராஜர் கோயிலை தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் திராவிடர் கழகம்சார்பில் சிதம்பரம் காந்தி சிலைஅருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் பேராசிரியர் பூசிஇளங்கோவன் தலைமை தாங்கி னார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகபொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், சிதம்பரம் முன்னாள்நகர்மன்ற தலைவர் சந்திரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியஅரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, தஞ்சாவூர் விறிசி சாமியார் முருகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கூறுகையில், "சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் அனைவரும் ஏறுவதற்கு அனுமதிக்க வேண்டும். நந்தனார் நுழைந்த தெற்கு கோபுர வாயிலில் தீண்டாமைச்சுவர் இருக் கிறது. இதை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அனை வரையும் ஒன்று திரட்டி சிற்றம்பல மேடை மீது ஏறி போராட்டத்தை நடத்துவோம்" என்றார்
இதேபோல் திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கூறுகையில், "சிதம்பரம் நடராஜர் கோயில் மன்னர்கள் கட்டிய கோயில். தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல. கோயில் மக்களுக்கானது.தமிழக அரசு இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயிலை கொண்டு வர வேண்டும்" என்றார்.