Published : 24 Feb 2022 06:12 AM
Last Updated : 24 Feb 2022 06:12 AM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டன: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் விலக்கிக் கொள்ளப் பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநக ராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம்உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன.

தேர்தல் முடிவுகள் வெளியீடு

அன்று முதல் அமைச்சர்கள், கட்சி பணிகளுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக் கப்பட்டது. நகர்ப்புறங்களில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாக் களை நடத்தவும் தடை விதிக் கப்பட்டது.

வேட்புனு தாக்கல் இன்மை, தேர்தல் விதிமீறல், வேட்பாளர்கள் மரணம் போன்ற காரணங்களால் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி முழுவதும் மற்றும் சில வார்டுகளில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதர வார்டுகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 22-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, வெற்றி பெற்றோர் விவரங்களும் அறிவிக்கப்பட்டன.

புவனகிரி பேரூராட்சி நீங்கலாக

கடலூர் மாவட்டம் புவனகிரிபேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த பேரூராட்சி நீங்கலாக இதர நகர்ப்புற உள்ளாட்சிகள் அனைத்திலும் இதுவரை அமலில்இருந்த தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் விலக்கிக்கொள் ளப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x