

பணம் கொண்டுசெல்வதற்கான விதிகளைத் தேர்தல் ஆணை யம் தளர்த்தக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பினர் நேற்று திருச்சியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணம் கொண்டு செல்ல முடியாமலும், பறிமுதல் நடவடிக்கை காரணமாகவும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பணம் கொண்டுசெல்வதில் விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி அருகில் நேற்று விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் கார ணமாக, தினமும் 30 சதவீதம் வணி கம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், இது 50 சதவீதமாக உயரும் அபாயம் உள்ளது. எனவே, ரூ.3 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்லும் வகையில் விதிகளைத் தளர்த்த வேண்டும். அதற்கு மேல் பணம் கொண்டுச் செல்ல எந்தெந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் விக்கிரமராஜா செய்தி யாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையம் விதிகளைத் தளர்த்தாவிட்டால், கடையடைப் புப் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக சென்னையில் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு போராட்டத் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வந்திருந்த திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர்.