

சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் 7 வார்டுகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்றது. இரு வார்டுகளில் இரண்டாமிடமும், 23 வார்டுகளில் மூன்றாம் இடத்தையும் பாஜக பிடித்தது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மகேஷ்வரி வெற்றி பெற்ற நிலையில், திமுக 2-ம் இடம் பிடித்தது, அதிமுக-வைச் சேர்ந்த சொர்ணாம்பாள் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மாநகராட்சி 9-வது வார்டில் திமுக-வைச் சேர்ந்த தெய்வலிங்கம் வெற்றி பெற்ற நிலையில், சுயேச்சையாக போட்டியிட்ட மோகன் 2-ம் இடமும், அதிமுக-வைச் சேர்ந்த நாகராஜ் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
13-வது வார்டில் திமுக-வைச் சேர்ந்த ராஜ்குமார் வெற்றி பெற்ற நிலையில், பாமக 2-ம் இடத்தையும், அதிமுக 3-ம் இடத்தை பிடித்தது .சேலம் மாநகராட்சி 31-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சையத்மூசா வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் இமாம் 2-ம் இடத்தையும், அதிமுக-வைச் சேர்ந்த மோகன் 3-ம் இடம் பிடித்தார்.
33-வது வார்டில் திமுக-வைச் சேர்ந்த ஜெய வெற்றி பெற்ற நிலையில், பாஜக-வைச் சேர்ந்த ஜெய 2-ம் இடத்தையும், அதிமுக-வைச் சேர்ந்த சரோஜா 3-ம் இடத்தை பிடித்தார். 44-வது வார்டில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த இமயவரம்பன் வெற்றி பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட வரதன் 2-ம் இடத்தையும், அதிமுக-வைச் சேர்ந்த கெஜிராமன் 3-ம் இடம் பிடித்தார்.
50-வது வார்டில் திமுக-வைச் சேர்ந்த பழனிசாமி வெற்றி பெற்றார். பாஜக-வைச் சேர்ந்த சுமதி 2-ம் இடத்தை பிடித்தார். அதிமுக-வைச் சேர்ந்த பரமசிவம் 3-ம் இடத்தை பிடித்தார். ஏழு வார்டுகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
6-வது வார்டில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 3,869 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அமமுக-வைச் சேர்ந்த விஷ்ணுபார்த்திபன் 2,801 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடமும், பாமக-வை சேர்ந்த அருள் 1662 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த வார்டில் அதிமுக வேட்பாளர் 1307 ஓட்டுகள் பெற்று நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதேவேளையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 8,3,10, 11, 15, 16, 17, 25, 29, 30, 32, 36,37,38,41,42, 43,46,48,54,55,56,57 ஆகிய 23 வார்டுகளில் பாஜக மூன்றாம் இடம் பிடித்தது.