Published : 24 Feb 2022 09:24 AM
Last Updated : 24 Feb 2022 09:24 AM
திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியின் தலைவர், துணை தலைவர்கள் யார்? என்பது பாமக, சுயேச்சை வேட்பாளர்கள் கையில் உள்ளதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில், ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், பள்ளிப்பட்டு, நாரவாரிக்குப்பம், கும்மிடிப்பூண்டி ஆகிய 5 பேரூராட்சிகளில் அதிகவார்டு உறுப்பினர் பதவியிடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.
அதே நேரத்தில், 15 வார்டுகளைக் கொண்ட திருமழிசை பேரூராட்சியின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, திமுக, அதிமுக, பாஜக,பகுஜன் சமாஜ், தேமுதிக,அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 79 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில்,6 வார்டுகளில் திமுகவும், ஒருவார்டில் மதிமுகவும், 6 வார்டுகளில் அதிமுகவும், தலா ஒருவார்டில், பாமக மற்றும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில், திருமழிசை பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்யக் கூடிய மறைமுக தேர்தலில், திமுகவுக்கு ஆதரவாக அதன் கூட்டணிக் கட்சியான மதிமுக உள்ளது.
இதனால், தலைவர், துணைத் தலைவர் பதவி திமுகவுக்கு கிடைக்க ஒரு வாக்கு அவசியமானதாக உள்ளது. அதே போல், அப்பதவிகளை கைப்பற்ற அதிமுகவுக்கு 2 வாக்குகள் முக்கியமானதாக இருக்கிறது.
ஆகவே, தலைவர், துணைத் தலைவர்கள் யார்? என்பது, பாமக மற்றும் சுயேச்சை என வெற்றி பெற்ற 2 வேட்பாளர்கள் கையில்உள்ளது. இதனால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாமக, சுயேச்சை ஆகியோரின் வாக்குகளைப் பெறபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT