

பிரதம மந்திரியின் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 79 லட்சத்து 87 ஆயி ரத்து 112 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களிடமிருந்து 991 கோடி ரூபாய் வைப்புத் தொகை யாக பெறப்பட்டுள்ளது. இத்திட்டத் துக்கு நகர்புறத்தை விட கிராமப்புற மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின், ‘ஜன்தன் யோஜனா' எனப்படும் வங்கி கணக்கு திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எந்த வைப்புத் தொகையும் இல்லாமல் ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடும் செய்யப்படும். 6 மாதங்களுக்கு பின் 'ஓவர் டிராப்ட்' தொகையாக ரூ.5 ஆயிரத்தை வங்கிகள் வழங் கும். அந்தத் தொகையை முறை யாக திருப்பி செலுத்தினால் ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதுகுறித்து, பொதுத் துறை வங்கி அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஏழை மக்கள் கந்து வட்டிக்காரர் களிடமும், அடகு கடைகளிலும் கடன் வாங்கி அவதிப்படுவதைத் தடுப்பதற்காக இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக் காக ரூ. 70 ஆயிரம் கோடியை மத் திய அரசு, ஒதுக்கீடு செய்துள்ளது.
முதலில் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களுக்கு வங்கிக் கணக் குப் புத்தகமும், 'ரூபே' என்ற ஏடிஎம் கார்டும் வழங்கப்படும். 6 மாதங்களுக்கு பின் ஓவர் டிராப்ட்டாக பெறும் தொகையை வாடிக்கையாளர் முறையாக திருப்பி செலுத்தினால் அடுத்தடுத் தும் கூடுதலாக கடன் வழங்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 79 லட்சத்து 87 ஆயிரத்து 112 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களிடமிருந்து 991 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக பெறப்பட்டுள்ளது. இதில், கிராமப்புறத்தில் அதிகபட்ச மாக 43 லட்சத்து 35 ஆயிரம் வங்கிக் கணக்குகளும், நகர்ப்புறத் தில் 36 லட்சத்து 51 ஆயிரம் வங் கிக் கணக்குகளும் தொடங்கப்பட் டுள்ளன. 72 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு ‘ரூபே’ ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.