

தமிழகத்தில் கட்சிகளை விலைக்கு வாங்கும் அளவுக்கு ஊழல் பெருகிவிட்டது என பாஜக தேசியச் செயலர் முரளிதர ராவ் குற்றம் சாட்டினார்.
மதுரையில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. இந்த ஊழலில் அதிமுக, திமுகவுக்கு பங்கு உள்ளது. அரசியல் கட்சிகளை விலைக்கு வாங்கும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை. அவருக்கு தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என அக்கறை இல்லை. இதனால் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதை முன்வைத்து பாஜக தேர்தலில் பிரச் சாரம் மேற்கொள்ளும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முன்னேறும். மீனவர்கள், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.