Published : 23 Feb 2022 07:47 AM
Last Updated : 23 Feb 2022 07:47 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டு,33 நகராட்சி வார்டுகள், 66 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 102 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “ உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும், ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகளாக, நெஞ்சுரத்துடன் களம்கண்ட அமமுக வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காகப் பணியாற்றிய தொண்டர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும் எனதுமனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும்வரை உத்வேகத்துடன் நம் பணியைத் தொடர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT