நடப்பாண்டில் 2,600 ரயில் பெட்டிகளை தயாரித்த ஐசிஎஃப்

நடப்பாண்டில் 2,600 ரயில் பெட்டிகளை தயாரித்த ஐசிஎஃப்
Updated on
1 min read

சென்னை: நடப்பு நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறைக்குத் தேவைப்படும் ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக ரயில் பெட்டி தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் பெற்று வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பாதிப்புக்குப் பிறகு சென்னை ஐசிஎஃப்-ல் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஐசிஎஃப்-க்கு இந்த நிதியாண்டில் மொத்தம் 3,674 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள ரயில் பெட்டிகளையும் விரைவில் தயாரிக்கும் வகையில் நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். இவற்றில் எல்எச்பி கொண்ட பெட்டிகள்தான் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, 15 விஸ்டடோம் சுற்றுலா ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in