

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் 18-வது வார்டுஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த வார்டில் பாமக சார்பில் போட்டியிட்ட ஆதிதிராவிடர் பெண் வேட்பாளர் ரேணுகா வெற்றி பெற்றுள்ளார்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் 18 வார்டுகளுக்கான தேர்தலில் பேரூராட்சியின் 18-வது வார்டு ஆதிதிராவிடர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாமக சார்பில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பாமக சார்பில் போட்டியிட்ட ஆதிதிராவிடர் வேட்பாளரான ரேணுகா தனசேகரன் 410 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் உஷா 374 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். நாம் தமிழர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்து டெபாசிட் இழந்தனர்.