

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில், மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலம் 134-வது வார்டில் பாஜக சார்பில் உமா ஆனந்தன் போட்டியிட்டார். அவர் 5,539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் சென்னை மாமன்றத்தில் பாஜக தனது கணக்கை தொடங்கியுள்ளது. இது சென்னைமாநகராட்சி தேர்தலில் பாஜகபெற்ற முதல் வெற்றியாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுசீலாபாலகிருஷ்ணன் 3,503 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அனுராதா 2,695 வாக்குகளும் பெற்றனர். உமா ஆனந்தன், மத்திய அரசின் சாதனைகளைக் கூறி வாக்குசேகரித்தது குறிப்பிடத்தக்கது.