Published : 23 Feb 2022 07:21 AM
Last Updated : 23 Feb 2022 07:21 AM

அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

சென்னை: மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஆவடி அதிமுக கவுன்சிலர் ஜி.ராஜேஷ் உள்ளிட்ட 2 பேர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தி: திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நேற்று மாலை ஆவடி மாநகராட்சி 14-வதுவார்டு அதிமுக கவுன்சிலர் ஜி.ராஜேஷ் மற்றும் 14-வது வட்ட அதிமுக செயலாளர் ஆனந்த்ராஜ் திமுகவில் இணைந்தனர்.

பொதுச் செயலர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் ஆவடி நாசர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x