

விருத்தாசலத்தில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட பெண் மருத்துவர் வெற்றி பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விருத்தாசலம் நகராட்சியின் 20-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சங்கவி முருகதாஸ் 612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மருத்துவரான இவர், தனது பிரச்சாரத்தின் போது வார்டில் உள்ள மக்களுக்கு, ‘மருத்துவ ஆலோசனைக் கட்டணம் பெறப்போவதில்லை’ எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தற்போது வெற்றிபெற்றிருக்கும் நிலையில், “வாக்குறுதி அளித்தபடி வார்டு மக்களுக்கான சேவையை தொடருவேன்” என்று தெரிவித்துள்ளார். இவர் விருத்தாசலம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.