

அதிமுக, திமுக ஆகிய விஷச் செடி களை தமிழகத்தைவிட்டு அகற்ற வேண் டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ண கோபாலை ஆதரித்து துவரங்குறிச்சி யில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அவர் பேசியது: இந்தப் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வரும் மழைநீரைச் சேமித்து வைத்து, குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழக நதிகளை இணைப்பதுதான் முதல் வேலை.
மணப்பாறையில் கலைக் கல்லூரி கட்டப்படும், தொழிற்சாலை கட்டப்படும். நானும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு ஆட்சி அமைத்த 3 மாதங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவோம். 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்.
அதிமுக, திமுக ஆகிய விஷச் செடிகளை தமிழகத்தைவிட்டு அகற்றி, லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு, கறை படியாத, நேர்மையான ஆட்சியைத் தரும் வகையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.