தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் திமுக பேச்சுவார்த்தை  நடத்தவில்லை: டிகேஎஸ் இளங்கோவன்

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிகேஎஸ் இளங்கோவன்

Published on

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் திமுக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தமது ஆதரவாளர்களுடன் பகிரங்கமாக வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது தற்கொலை முடிவு என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.

இந்நிலையில், தேமுதிக அதிருப்தியாளர்களை திமுக தன் பக்கம் இழுக்க சதி செய்கிறது என்று தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ''தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கட்சித் தலைமை சரியில்லாததே சந்திரகுமார் உள்ளிட்டோரின் முடிவுகளுக்குக் காரணம்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in