

ராமநாதபுரம் மாவட்டம், முது குளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனிய சாமிக்கு வாக்கு சேகரிக்க நேற்று முன்தினம் மாலை முதுகுளத் தூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடத்தது. தொகுதி பறக்கும்படை அதிகாரி என்.ஆர்.மாடசாமி, பொதுக் கூட்டத்தை பார்வையிட்டார்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பொதுக் கூட்டம் நடத்தியதாக, கூட்டத் துக்கு அனுமதி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன், மாவட்டச் செயலாளர் தர்மர், வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, நடிகர் கருணாஸ், அன்வர்ராஜா எம்பி, நெல்லை பாலாஜி ஆகியோர் மீது முதுகுளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.