

பெரம்பூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங் கள் பறிமுதல் செய்யப் பட்டன.
சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பறக் கும்படை அதிகாரி தணிகாசலம் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை வழிமறித்து சோதனை செய்தபோது, 10 அட்டைப் பெட்டிகளில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய ஆவணம் இல்லை
பறக்கும்படையினர் அவற்றை பறிமுதல் செய்து, பெரம்பூர் தேர்தல் அதிகாரி அழகு மீனாவிடம் ஒப் படைத்தனர். விசாரணையில், கைக்கடி காரங்கள் அனைத்தும் சென்னை சவுகார்பேட்டை யைச் சேர்ந்த ராம் என்ப வருக்குச் சொந்தமானவை என்பது தெரிந்தது. ஆனால் கடிகாரங்கள் கொண்டு செல்வதற்கான எந்த ஆவ ணங்களும் அவரிடம் இல்லை. இவற்றின் மொத்த மதிப்பு ரூ,5 லட்சம் ஆகும்.