

வேலூர் மாநகராட்சியின் மிகவும் இளம் வேட்பாளராக திமுக சார்பில் களம் இறங்கிய கல்லூரி மாணவி மம்தா குமார் வெற்றி பெற்றார்.
வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் திமுக சார்பில் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவி மம்தா குமார் போட்டியிட்டார். மாநகராட்சி தேர்தலில் போட்டி யிடும் மிகவும் இளம் வேட்பாளர் என்பதால் அவரது வார்டில் திமுகவினர் கூடுதல் கவனத்துடன் வாக்குகள் சேகரித்தனர். 28-வதுவார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் திமுகவின் இளம் வேட்பாளர் மம்தா குமார் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் மிகவும் இளம் கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள மம்தா குமார் வெற்றிக்கான சான்றிதழை வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.