

திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவரான ஜோலார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் ஜோலார்பேட்டை நகராட்சி 10-வது வார்டில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜோலார்பேட்டை நகராட்சியில் போட்டியிட்ட பாஜக மாவட்ட தலைவர் அசோகன் ஒரு வாக்கு கூட வாங்காமல் படுதோல்வியடைந்துள்ளார். அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவக்குமார் 845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இது குறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ஜோலார்பேட்டை நகராட்சியில் 10-வது வார்டில் போட்டியிட்ட அசோகன் வீடு 11-வது வார்டில் உள்ளது. அந்த வார்டு ரிசர்வ் (தனி) வார்டாக அறிவிக்கப்பட்டதால் பக்கத்து வார்டான 10-வது (பொது) வார்டில் அசோகன் போட்டியிட்டார். இருந்தாலும், அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், சிலர் செய்த சூழ்ச்சியால் அவர் தோல்வியடைந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.